யாழ்ப்பாணம் தீவகப் கடற்கறையோரங்களில் மனித சடலங்கள் கரைஒதுங்கியது தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களது சடலங்களா? அல்லது அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அகதிகள் படகு விபத்தில் சிக்கிய சடலங்களா என்ற கோணத்தில் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.
உடற்குற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சடலங்களை பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி இச் சடலங்கள் இலங்கைப் பிரஜையுடையது அல்ல என தெரிவித்துள்ளார்.
இலங்கை அல்லாத வெளிநாட்டவருடையதாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுளார்.
























0 comments :
Post a Comment