.

மண்கும்பான் பள்ளிவாசலின் வரலாறு..!

சுமார் 420 வருட கால வரலாற்றை கொண்ட  மண்கும்பான் பள்ளிவாசல் யாழ்ப்பான முஸ்லிம்களின் பூர்வீக இருப்பை உறுதிப்படுத்துகிறது. சுமார் 100 பரப்பளவை கொண்ட பள்ளியின் நில உரிமையையும் கொண்டுள்ளது.

ஒஸ்மானியா கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.எம்.யூஸுப் B A  அவர்களின், பள்ளிவாசல் பூர்வீகம் பற்றிய நூலில் சுமார் 420 வருடமாக அங்கு சியாரம் உள்ளதாகவும், அதற்கு முன் தமிழ்நாடு கயல்பட்டினத்தை சேர்ந்த முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளாதகவும் எனவே அதற்கு மேற்பட்ட காலங்கள் முஸ்லிம்களின் வாழ்ந்த வரலாறு காணப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுளார்.

அங்குள்ள சியாரத்தில் அடங்கப் பட்டிருக்கும் இறை அடியார் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுளார். (கூடுதலாக சியாரங்கள் கடற்கரையை அண்டி இருப்பதும் இந்த வழிகேடு தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செயீப்பட்டுள்ளது என்பதை குறித்து நிற்கிறது)

நாம் இங்கு சொல்ல வருவது குறித்த சியாரமும் பள்ளிவாசலும் முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தும் காரணிகளில் ஒன்றாக இருப்பதுதான்.

1950 வரை தனியார் ஒருவரின் சொத்தாக இருந்த பள்ளிவாசலும், அதன் சுற்றுப்புறமும் யாழ்ப்பான முஸ்லிம்களுக்காக பொதுச் சொத்தாக மாற்றப்பட்டது. அன்றிலிருந்து பரிபாலன சபை ஒன்று ஏற்படுத்தபட்டு நிர்வகித்து வந்தாலும் 1965 ஆண்டு யாழ்பாணத்தை சேர்ந்த தனவந்தர்களிடம் பரிபாலனம் ஒப்படைக்கப்பட்டது.

1968 ல் அப்பள்ளிவாசல் தற்போது இருக்கும் புதிய தோற்றத்தில் கட்டப்பட்டு வருடா வருடம் கந்தூரியும் நடைபெற்று வந்துள்ளது. 1968 வரை பள்ளியும் சியாரமும் ஒன்றாகவே இருந்துள்ளது. அதன்பின் தொழுகைக்காக தனியாக பள்ளிவாசல் ஒன்று உருவாக்கபட வேண்டும் என்ற நோக்கிலேயே சியாரத்தை விட்டு பிரித்து  பள்ளிவாசல் அமைக்கபட்டுள்ளதாக வரலாற்று நூல் ஆசிரியர் வலியுறுத்தி உள்ளார் கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் இது அமைந்துள்ளது.

0 comments :

Post a Comment

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips