.

மண்கும்பான் பகுதியில் மீண்டும் ஒரு சடலம் கரை ஒதுங்கியது...!

மண்கும்பான் கிழக்குக் கடல் பகுதியில் 01.08.2013 ஆகிய நேற்றைய தினம் காலை மேலும் ஒரு ஆணின் சடலம் மீனவர்களினால் அவதானிக்கப்பட்டு இராணவத்தினருக்கு அறிவிக்கப்பட்டது.

இச் சடலத்தினை நேற்று மாலை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என அறியப்படுகின்றது.

இவ்வாறு தீவகத்தின் பல பகுதிகளிலும் சடலங்கள் கரை ஒதுங்குகின்றன.

இதேவேளை கரையொதுங்கிய சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது  வைக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் பெண் ஒருவரது உடலிலும் குழந்தை ஒருவரது உடலிலும் பாதுகாப்பு அங்கி உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளன. 

இதன்படி அண்மையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றவேளை படகு விபத்துக்குள்ளாகியது அதில் பயணித்தவர்களாக இருக்கலாம் என மேலும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.  

எனினும் சடலங்கள்  குறித்து எவரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

0 comments :

Post a Comment

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips