.

“மழை வருவதற்கு முன்னால் மதகுவைப் புனரமையுங்கள்” அல்லைப்பிட்டி மக்களின் அவசர வேண்டுகோள்..!

அல்லைப்பிட்டியை பண்ணை பிரதான வீதியுடன் இணைக்கும் அல்லைப்பிட்டியின் இரண்டாவது  பிரதான வீதி அலுமினியம் தொழிற்சாலை வீதியாகும்.

இவ் வீதியானது கடந்த பல தசாப்த காலமாக  புனரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இவ்வீதியில் காணப்படும் முன்று மதகுகளில் ஒரு மதகு மிகவும் பாரியளவில் சேதமடைந்து காணப்படுகிறது. 

இவ் வீதியால் பயனிக்கும் மக்கள் இவ் மதகுவினை கடந்து செல்வதில்
 மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

இக்கிராம மக்கள் இவ் மதகினை கடப்பதற்கு பதிலாப வயல் தரவையூடாகவே பயனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பருவ மழை நெருங்குவதால்
இவ் வயல் வெளிகளில் அதிக மழைநீர் தேங்கி நிற்பது வழக்கம். எனவே மழைகாலங்களில் இவ்வீதியினூன போக்குவரத்து முற்றிலும் தடைப்படும்.

அல்லைப்பிட்டியை பண்ணை வீதியுடன் இணைக்கும் இலகுவழிப் பாதையான அலுமினியம் தொழிற்சாலை வீதியில் காணப்படும் மதகுவினை உடனடியாக புனரமைப்பு செய்ய வேண்டும் என்பதே இக் கிராம மக்களின்
கோரிக்கையாகும்.

இதனிடயே புலம் பெயர் வாழ் அல்லைப்பிட்டி மக்கள்  சிலரால் இவ் வீதியினை புனரமைப்பதற்கென நிதி திரட்டப்படுவதகாக தகவல் வெளியாகியுள்ளது. எது எவ்வாறாயினும் தற்போதைய அவசர தேவை கருதி இவ் மதகினை புனரமைப்புச்செய்வதே அல்லைப்பிட்டி கிராம மக்களின் அவசிய தேவை.

இம் மதகுபுனரமைப்புப் பணியை  முதலில் செய் வேண்டும் என்பதே புலம் பெயர் வாழ் அல்லைப்பிட்டி மக்களிடம் வைக்கும் வேண்டுகோள்.


0 comments :

Post a Comment

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips