.

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் திருடர்களின் கைவரிசை..!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் 22.06.2013 சனிக்கிழமை  திருடர்கள் சூறையாடியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தை உடைத்து ஆலயத்தில் இருந்த உண்டியல்  பணம் மற்றும் மின்மோட்டர் மற்றும் ஒலி பெருக்கி உட்பட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சனிக்கிழமை இரவு  நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்த போதிலும் மறுநாள் காலை வருகை தந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு திரும்பியிருந்தனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதன் பின்னர் ஞாயிற்றுக் கிழமை இரவும் வேளையும் மறுபடியும் திருடர்கள் அங்கு வந்துள்ளனர். அப்பொழுது அங்கு காவலில் இருந்த ஊர் மக்களினால் விரட்டப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தின் பின்னர் ஆலயத்தில் ஊர் மக்கள் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

இக் கொள்ளைச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட மண்கும்பான் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips