.

மண்கும்பான் பற்றி...!

லைடன் தீவு (Layden island) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் பெரிய தீவு ஆகும். 

வேலணைத்தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுவதுண்டு. கி.பி. 1658 முதல் கி.பி. 1796 வரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டியிருந்த தீவுகள் ஏழுக்கும் ஒல்லாந்து (Holland) நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்களை இட்டார்கள். இவற்றில் தெற்கு ஒல்லாந்தில் உள்ள லெய்டன் (Leiden) (யாழ்ப்பாணத்தில் இப்பெயரை லைடன் என்றே உச்சரிப்பது வழக்கம்) நகரத்தின் பெயர் இத் தீவுக்கு வழங்கப்பட்டது. 

இங்கு பத்து கிராமங்கள் உண்டு, அவை பின்வருமாறு: 

1. சுருவில் 
2. நாரந்தனை 
3. கரம்பொன் 
4. ஊர்காவற்றுறை (காவலூர்) 
5. பரித்தியடைப்பு 
6. புளியங்கூடல் 
7. சரவணை 
8. வேலணை
9. அல்லைப்பிட்டி 
10. மண்கும்பான் 

இவற்றுள் ஊர்காவற்றுறை (காவலூர்) பிரித்தானியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் வடக்கு இலங்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த துறை முகங்களில் ஒன்றாகும். 

லைடன் தீவின் கிராமங்களைப் பற்றியொரு பாடல் தொகுதி 

ஊர்காவர்றுறை, கரம்பன், சுருவில் 
உற்றநற் புளியங்குடல் நாரந்தனை 
பேர்மிகு சரவணை, வேலனை மண்கும்பான் 
பெருமை சொல் மண்டைத்தாவல் லைப் பிட்டி 
சேர்ந்தே லைடன் தீவெனும் நிலமாம்.

(கவிஞர் சக்தி அ. பால. ஐயா)



மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips