சூரியக் குடும்பத்தின் நீலம் மற்றும் பச்சை நிறத்திலான கிரகம் நெப்ட்யூன்.
இந்த கிரகத்திற்கு ஏற்கனவே 13 நிலாக்கள் உள்ளன.
இந்நிலையில் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் இன்னொரு புதிய நிலாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
S/2004 N 1 என்று பெயரிட்டுள்ள, இந்த நிலாவின் சுற்றளவு 19 கிலோமீற்றர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலவானது சிறிதாக மட்டுமல்லாமல் மங்கலாகவும், பிரகாசம் இன்றியும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.