யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வழித்தடத்தில் சேவையிலீடுபடும் இ.போ.ச பேரூந்தொன்று இன்று (22) காலை அல்லைப்பிட்டிப் பகுதியில சிறிய பாலமொன்றின் தடுப்புச் சுவரை உடைத்தபடி வீழ்ந்து பலத்த சேதமடைந்துள்ளது. இதன்போது பத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுக்குள்ளாகினர்.
இவ் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு உடனடியாகச் சென்ற ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விபத்தின் உண்மைத் தன்மையையும் விசாரித்தறிந்து கொண்டார்.






















