.

சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு ..!

புங்குடுதீவு (Pungudutivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். 

யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். 

இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.
இத்தீவானது வேலணை வாணர் பாலத்தினால் இணைக்கப்பட்டதன் மூலம் இங்குவாழும் மக்கள் பெரும் பயனைப் பெற்றுள்ளார்கள். 

குறிகட்டுவான், கழுதைப்பிட்டி போன்ற துறைகள் மூலம் மற்றய தீவுகளுடனான தொடர்புகளைக் கொண்டுள்ளது. 

இங்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கடல் வளத்தின் மூலம் மீன்பிடிப்பும்சிறப்பாக நடைபெறுகின்றன.

இவற்றில் தெற்கு ஒல்லாந்தில் உள்ள லெய்டன் (Leiden) (யாழ்ப்பாணத்தில் இப்பெயரை லைடன் என்றே உச்சரிப்பது வழக்கம்) நகரத்தின் பெயர் இத் தீவுக்கு வழங்கப்பட்டது

புங்குடுதீவு என்ற பெயர் தோன்றியமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.

அக்காலத்தில் புங்கை மரம் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தமையால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாக கதைகள் உண்டு. 

தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்பு படுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவது முண்டு. 

மேலும் இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. 

இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர். இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ எனப் பெயரிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளை கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் இது அமைவு பெற்று விளங்குகின்றது. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.



0 comments :

Post a Comment

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips