.

ஓட்டுநரின் அஜாக்கிரதையால் இரு மடங்கு வேகத்தில் செலுத்தப் பட்டதன் விளைவே ஸ்பெயின் ரயில் விபத்து..!

ஸ்பெயினில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த மோசமான ரயில் விபத்துக்கு ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் எனப் போலிசார் அறிவித்துள்ளனர்.இவ்விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆகவும் காயமடைந்தோர் தொகை 130 ஆகவும் உள்ள அதேவேளை கவலைக்கிடமான நிலையில் 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வளைவில் 90 Km வேகத்தில் செல்ல வேண்டிய ரயில் இரு மடங்கு அதிகமாக 180 Km வேகத்தில் சென்றதே விபத்துக்குக் காரணம் என வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் இந்த அனர்த்தம் ஒரு தீவிரவாதத் தாக்குதல் அல்ல என உறுதிப் படுத்தியுள்ள ஸ்பெயின் போலிசார் விபத்துக்குக் காரணமான ரயில் ஒட்டுநரை உடன் கைது செய்துள்ளனர். 52 வயதாகும் இந்த ஓட்டுநர் இதற்கு முன் 200 Km வேகத்தில் ரயிலை இயக்கி வேகமானியின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டவர் என அறியப் பட்டுள்ளது.

சுமார் 200 பயணிகளுடன் விபத்துக்குள்ளான இந்த ரயிலில் மரணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்பானியர்கள் என்பதுடன் 4 வெளிநாட்டினரும் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் முறையே அமெரிக்கா, அல்ஜீரியா, மெக்ஸிக்கோ மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களில் சிலரின் சடலங்கள் மோசமாக சேதமடைந்திருப்பதால் அவர்களின் அடையாளம் உறுதிப் படுத்த டி என் ஏ சோதனை மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.

இதேவேளை ஸ்பெயின் அரசர் ஜுவான் கார்லோஸ் மற்றும் ராணி சோஃபியா ஆகியோர் வியாழன் மாலையே சான்டியாகோ டீ கொம்பொஸ்டெலா இலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று காயமுற்றவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்பானிஷ் பிரதமர் மாரியானோ ராஜோயும் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன் மீட்புப் பணிகளைத் துரிதப் படுத்தியுள்ளார். ஸ்பெயினில் தொடர்ந்து 7 நாட்களுக்கு துக்க தினம் அனுட்டிக்கப் படவும் உள்ளது.

இதேவேளை ரயில்வே பாதுகாப்புக் கண்காணிப்புக் கமெராவில் இந்த விபத்து நிகழ்ந்த 10 செக்கன்கள் நேரடியாகப் படம் பிடிக்கப் பட்டு இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

மண்கும்பான்

தொழிநுட்பச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

 
Blogger Tips